கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல்

🕔 April 6, 2020

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் போலி தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாதுவ பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மேற்படி பெண் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன் இணையத்தளத்தை பயன்படுத்தி பல்வேறு வதந்திகளை பரப்புவோர் மற்றும் அவ்வாறான தகவல்களை மற்றவர்களுக்கு பரிமாறுகின்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்