ஒன்றரை வயது குழந்தை அலையில் அள்ளுண்டு மரணம்: நிந்தவூரில் சோகம்

🕔 August 6, 2019

– பாறுக் ஷிஹான் –

 ன்றரை வயது நிரம்பியகுழந்தையான்று நிந்தவூர் பகுதியில்  கடலில் மூழ்கி இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளது.

நிந்தவூர் 09ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் – பாத்திமா நிஸா தம்பதியரின் ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும் ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

குறித்த குழந்தையினுடைய தாயின் தந்தை, கடற்கரைக்கு குழந்தையை கூட்டிச் சென்று, விளையாட விட்டுள்ளார்.

இவ்வாறு விளையாடிய  குழந்தையை அவர்  கவனிக்காத போது கடல் அலை அடித்து சென்றுள்ளது.

ஆயினும் குழந்தையை அங்கும் இங்கும் தேடிப்பார்த்த அவர், வீட்டுக்கு திரும்பிச் சென்று வீட்டாரிடம் குழந்தையை காணவில்லையென கூறிவிட்டு, மீண்டும் கடற்கரைக்கு தேடிச் சென்றுள்ளார்.

அதன் போது, சுமார் 800 மீட்டருக்கு அப்பால் குழந்தையின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த குழந்தையின் தந்தை வெளிநாட்டுக்குச் சென்று 15 நாட்களேயான நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments