உண்ணா விரதத்தை முடித்த ரத்ன தேரர், வைத்தியசாலைக்கு விரைவு

🕔 June 3, 2019

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தனது உண்ணா விரதத்தை நிறைவு செய்துள்ளார்.

இதனயைடுத்து, அவர் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இன்றைய தினம் வரை, நான்கு நாட்கள் அவர் உண்ணா விரதமிருந்தார்.

ஆயினும் அவர் நீராகாரம் பருகி வந்தமையினை ஊடகமொன்று வெளிப்படுத்தியிருந்தது. அதனை புதிது செய்தித்தளமும் செய்தியாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்:

01) கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா
02) உண்ணா விரதம் இருப்பதாகக் கூறப்படும் ரத்ன தேரர், நீர் ஆகாரம் அருந்தினார்: அம்பலமாக்கியது நியுஸ் ஃபெஸ்ட் 

Comments