முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டு நாஜிநாமா: அரசியல் களத்தில் அதிரடி முடிவு
முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் அனைவரும் கூட்டாக ராஜிநாமா செய்யவுள்ளனர் என அறிய முடிகிறது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் சாத்தியம் உள்ளது.
ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் றிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் எனக் கூறி, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருந்த நிலையிலேயே, இந்தக் கூட்டு ராஜிநாமா இடம்பெறவுள்ளது.