உண்ணா விரதம் இருப்பதாகக் கூறப்படும் ரத்ன தேரர், நீர் ஆகாரம் அருந்தினார்: அம்பலமாக்கியது நியுஸ் ஃபெஸ்ட்

🕔 June 2, 2019

– அஹமட் –

ண்ணா விரதம் இருந்து வருவதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், திரவ ஆகாரம் பருகும் காட்சியொன்றினை, கடந்த இரவு ‘நியுஸ் ஃபெஸ்ட்’ ஒளிபரப்பியது.

கண்டி வைத்தியசாலை மருத்துவர்கள் குழாமொன்று சனிக்கிழமை மாலை, தேரர் – உண்ணாவிரதம் இருக்கும் இத்துக்குச் சென்று, அவரின் உடல் நிலையைப் பரிசோதித்ததாகவும் அந்தச் செய்தியில் நியுஸ் ஃபெஸ்ட் தெரிவித்தது.

இதன்போதே, கிளாஸ் ஒன்றில் திரவ ஆகாரத்தை தேரர் அருந்தும் காட்சி ஒளிப்பரப்பானது.

அமைச்சர் றிசாட் பதியுதீன், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு கோரி, வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் – தலதா மாளிகை முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், உண்ணா விரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நீராகாரம் அருந்தும் வீடியோ காட்சி

Comments