பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து 2289 பேர் கைது; 1665 நபர்களுக்கு பிணை
ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 2289 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர்களில் 1665 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 423 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 211 பேர் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.