மூன்று அமைப்புகளுக்கு தடை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு

🕔 May 14, 2019

 பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இதன்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாஅதே மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் அவசரகால விதிமுறைகளின் 75-1 சரத்துக்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைப்புக்களுக்கு ஜனாதிபதி சிறிசேன தடை விதித்திருந்தார்.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்