வன்முறைகளுடன் தொடர்புடைய அமித் வீரசிங்க, நாமல் குமார கைது
மகசோன் பலகாய எனும் இனவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் ஊழலுக்கெதிரான அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்கிழமை இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
தெல்தெனிய மற்றும் வரகாபொல பிரதேசங்களில் வைத்து இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் இவர்களை விசேட பொலிஸ் அணியொன்று கைது செய்துள்ளது.
கண்டி – திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த காலத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளை,
அமித் வீரசிங்க தலைமையேற்று நடத்தினார் என்கிற குற்றச்சாட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.