முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இப்போது எந்தக் கட்சி; பகிரங்கமாக நேற்று அறிவித்தார்

🕔 February 18, 2019

– முன்ஸிப் அஹமட் –

“நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை” என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவராகவும் பதவி வகித்த எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

தேசிய காங்கிரஸில் முரண்பட்டுக் கொண்ட உதுமாலெப்பை, அந்தக் கட்சியில் இன்னும் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்வி, உள்ளுர் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையிலேயே, தேசிய காங்கிரஸில் இருந்து அவர் விலகி விட்டமையை பகிரங்கமாக நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளராக எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இந்த நியமனத்தை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் – உதுமாலெப்பை சாய்ந்து விட்டார் என்கிற பேச்சுக்களும், உள்ளுர் அரசியலரங்கில் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே, தற்போதைய தனது அரசியல் நிலைப்பாட்டினை உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்