ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில்

🕔 September 13, 2018
–  றிசாத் ஏ காதர் –

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியலில் விடியலாகவும் திகழ்ந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18வது நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நுார் ஜூம்ஆ மஸ்ஜிதில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹசன் அலி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும்,  பிரபல தொழிலதிபருமான  நஸார் ஹாஜி மற்றும் கூட்டமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள், அரசியற் பிரமுகர்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பெருந்தலைவர்  மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் உருவாக்கிய ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சி திசைமாறி பயணிப்பதனாலும், முஸ்லிம்களின் விடிவுக்கு அந்தக் கட்சியின் தலைமை வழிகோலாது என்கிற நிலைமையும் உருவானமையினை அடுத்து, அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் இணைந்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு என்கிற வண்ணாத்திப்பூச்சியை சின்னமாக கொண்ட கட்சியை ஆரம்பித்து, கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தனித்தும், கூட்டமைத்தும் போட்டியிட்டமை குறிப்பித்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்