20ஐ கைவிட அரசாங்கம் தீர்மானம்; வருட இறுதியில் தேர்தலுக்கும் தயார்

🕔 September 18, 2017

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கான எண்ணத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. அதேபோன்று, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திப் போடும் திட்டத்தையும் அரசாங்கம் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

20ஆவது திருத்தம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம், நாளை மறுநாள் புதன்கிழமை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளது.

20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதாயின் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் வெற்றி பெறுவதோடு, நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினையும் பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளமையினாலேயே, 20ஐ கை விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மேற்படி பரிந்துரையானது ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல், வருட இறுதியில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்