நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க, கீதாவுக்கு தகுதியில்லை: நீதிமன்றம் அறிவிப்பு

🕔 May 3, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளமையின் காரணமாக , தொடர்ந்தும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.

கீதா குமாரசிங்கவுக்க எதிரான இந்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி விஜித் மலல்கொடவின் இணக்கத்திற்கு அமைய, நீதிபதி பத்மன் சூரசேன இந்த தீர்ப்பினை அறிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்து குடியுரிமையை பெற்றுள்ள கீதா குமாரசிங்க தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என்று அந்த தீர்ப்பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை பெற்ற எவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது எனத் தெரிவித்து, கீதாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த கே. புவனக்க, ஜே.கே. அபேவர்தன உள்ளிட்ட நான்கு பேர் கீதா குமாரசிங்கவிற்கு எதிராக இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

கடந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பாக காலி மாவட்டத்தில் போட்டியிட்ட கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்