இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு

🕔 May 3, 2017

பொதுபல சேனாவின் தந்தையான சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது என, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்த நாட்டில் ஹலால், புர்கா விடயங்களில் இனவாத விஷத்தை மக்கள் மத்தில் விதைப்பதற்கும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பேசி முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கிளப்பி விட்டமைக்கும் முழுக் காரணமாக இருந்த சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசிய கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் எம் சமூகத்துக்கு எதிராக கடும் விஷம கருத்துக்களை விதைத்தவர் சம்பிக்க ரணவக்க. அப்போது எமது சமூகம் மீது சேற்றை வாரி இறைத்தவர், இப்போது ஒரேயடியாக மௌனித்துப் போயுள்ளார். இவருடைய   மௌனத்தின் பின்னணியில் ஆயிரம் சூழ்ச்சிக்கள் உள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது நடக்கும் சகல விடயங்களுக்குப் பின்னாலும், அரசாங்கத்தின் பங்காளிகளான இனவாதிகளே உள்ளனர். தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வரை மௌனமாக இருந்தவர்கள், இன்று அதிகாரத்தில் இருந்து கொண்டு வேலையை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

இந்த இனவாதிகள்தான் தற்போது ஐ.தே.கட்சியில் முக்கியஸ்தர்களாக உள்ளனர். தங்களிடம் இனவாதம் இல்லை என, மார்தட்டிக் கொண்ட ஐ.தே.கட்சி, இன்று இனவாதத்தின் தந்தையும், பொதுபலசேனாவின் ‘கோட் பாதரு’மாகிய சம்பிக்கவை, மே தின கூட்ட மேடையின் முன் வரிசையில் வைத்து அழகு பார்க்கிறது. 

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்ற  கdவில் காய் நகர்த்தும் சம்பிக்க, சிறுபான்மை மக்களை கவரும் நோக்கிலே, இனவாதத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு, தற்போது ஐ.தே.கட்சியில் குடி புகுந்துள்ளார். இவர் போன்வர்கள் அமரும் மேடையில் கபீர் ஹாசீம், ஹலீம் போன்றவர்கள் அமர்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

சம்பிக்க ரணவக்க தொடர்பிலும், இந்தியாவுடன் கூட்டு வைத்திருக்கும் ரணில் தொடர்பிலும் முஸ்லிம்கள் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்