சொத்துக்கள் வந்ததெப்படி; சிராந்தி சொல்லும் பாட்டிக் கதை

🕔 November 14, 2016

shiranrhi-094முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் சொத்துக்கள் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வரும்  நிலையில், டெய்சி எனும் பாட்டி ஒருவரிடமிருந்து குறித்த சொத்துக்கள் தனது புதல்வர்களுக்குக் கிடைத்ததாக, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி – சிராந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் காணியொன்று தொடர்பில், டெய்சி எனும் மூதாட்டியொருவரிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இந்நிலையில் டெய்சி என்பவர் யார் என,சிராந்தி ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் விளக்கமறித்துள்ளார்

“டெய்சி என்பவர் எனக்கு சித்தியாவார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன.

வர்த்தகர் ஒருவர் ரத்தின கற்கள் அடங்கிய பொதி ஒன்றை, முன்னொரு காலத்தில் பாட்டியிடம் கையளித்தார். அவருடன் குறித்த வர்த்தகருக்கிருந்த தனிப்பட்ட உறவு காரணமாகவே டெய்சி பாட்டியிடம் அதனை வழங்கியிருந்தார்.

இன்னொரு வர்த்தகர் பணப்பை ஒன்றை டெய்சி பாட்டியிடம் வழங்கியிருந்தார்.  வர்த்தக நடவடிக்கைகளுக்காக அந்தப் பணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், டெய்சி பாட்டி தனது சொத்துக்களை, எனது மூன்று பிள்ளைகளுக்கும் வழங்க தீர்மானித்திருந்தார்.

அவருக்கு எனது பிள்ளை குறித்து அக்கறை உள்ளன. அதில் என்ன தவறு? அவரிடம் நிறைய சொத்து இருந்தமையால் என் பிள்ளைகளுக்கு கொடுத்தார்.

தற்போது அவருக்கு இந்த பிரச்சினைகளின் காரணமாக சரியான நினைவுகளும் இல்லாமல் போய்விட்டது” என சிராந்தி கூறியுள்ளார்.

இப்படியான பாட்டிக் கதைகள் மூலம், ராஜபக்ஷ குடும்பத்தினர் தமது மோசடிகளை மூடி மறைக்க முற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்