
யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் 51 லட்சத்து 50,626 ரூபாயை சம்பளமாக பெற்றதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்குத் இன்று (15) தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பணமோசடி வழக்கின் சாட்சி விசாரணையின் போது, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உடேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அரச தரப்பு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதன்போது, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலத்தில் யோஷித ராஜபக்ஷவுக்கு சுமார் 5,150,626 ரூபா சம்பளமாக வழங்கப்பட்டதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணையின் போது, இன்று (15) சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் இதனைக் கூறினார்.
குறித்த தொகையில் படிகள் (allowances) சேர்க்கப்படவில்லை என்றும் அந்தச் சாட்சி மேலும் தெரிவித்தார்.
இந்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் 2026 ஒக்டோபர் 30-ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.



