கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

🕔 November 14, 2016

hakeem-087– எஸ். அஷ்ரப்கான் –

ல்முனை நகர அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான  சட்டத்தரணி  எச்.எம்.எம். ஹரிஸின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு வருகிறார்.

இன்றைய தினம் கல்முனை இறைவெளிக்கண்டம் (கிறீன்பீல்ட்) பிரதேசம் மற்றும் சாய்ந்தமருது வொலிவோரியன் பிரதேச காணிகளில் மண் நிரப்பும் வேலைத்திட்டங்கள் ஆரப்பித்து வைக்கப்படவுள்ளதோடு, சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல்லும் நடப்படவுள்ளது.

 இதேவேளை, சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தின் சுற்றுமதில் அமைக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இன்று மாலை  7.00 மணிக்கு சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்