பௌத்த பேரினவாதச் செயற்பாடுகள் குறித்து, புத்திஜீவிகளுக்கு அமைச்சர் மனோ கடிதம்

🕔 November 14, 2016

mano-ganeshan-09சிறுபான்மை மக்கள் மீது, பௌத்த பிக்குகள் மேற்கொண்டுவரும் அடாவடிச் செயல்கள் உள்ளிட்ட பேரினவாத நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக, அமைச்சர் மனோ கணேசன் மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி ஜீவிகளுக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விகாதராதிபதி நேற்று முன்தினம்ந, கிராம சேவகர் ஒருவரிடம் நடந்து கொண்ட விதம் தொடர்பாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் பேசிய சிங்கள இளைஞரின் நடவடிக்கை குறித்தும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், பொதுபலசேனா அமைப்பின் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன ஜக்கியம் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு தனக்கு வழங்கப்பட்டுள்ளபோதிலும், இனியும் வாய் மூடி மெளனியாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தர்களின் பேரினவாத நடவடிக்கைகள் தொடர்பில் சிங்களவர்கள் மௌனம் காத்து வரும் நிலையில், தனக்கு வேறு தெரிவுகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நல்லாட்சியில் தொடர்ந்தும் சிறுபான்மையினர் மீது நிந்தனை மேற்கொள்ளப்படுவததை  பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மனோ கணேசன் தனது மடலில் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்