உலகில் வயதான இரட்டையர்: கின்னஸ் சாதனை

உலகில் வயதான இரட்டையர்: கின்னஸ் சாதனை 0

🕔21.Sep 2021

உலகின் வயதான இரட்டையர்களாக உமேனோ மற்றும் கொடாமா ஆகிய ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுக்கு வயது 107 ஆண்டுகளும் 300 நாள்களும் ஆகின்றன. இதற்கு முன்னரும் ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகளே வயதான இரட்டையர்களாக இருந்தனர். அந்தச் சாதனையை உமேனோவும் கொடாமாவும் முறியடித்துள்ளனர். ஜப்பானில் முதியோர் தினம்

மேலும்...
கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை

கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை 0

🕔21.Sep 2021

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை: வெட்டுப் புள்ளி விவரம் வெளியானது

க.பொ.த உயர்தரப் பரீட்சை: வெட்டுப் புள்ளி விவரம் வெளியானது 0

🕔21.Sep 2021

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளிடப்பட்டுள்ளன. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவர். அத்துடன், பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதம் வெளியாகும் என பல்கலைக்கழக ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான மேலதிக விபரங்கள் www.ugc.au.lk என்ற இணையளத்தளத்துக்கு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல் 0

🕔21.Sep 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் 05 மேல் நீதிமன்றங்களில் இதுவரை 09 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமாவதாக பல்வேறு தரப்பினரும் கூறிய குற்றச்சாட்டுகளை தான் கடுமையாக மறுப்பதாகவும் அவர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம் 0

🕔21.Sep 2021

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று (21) காலை பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பசில் ராஜபக்ஷ – நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
“இலங்கை நிராகரிப்பால் ஐ.நா நடவடிக்கையில் எந்த தாக்கமும் இருக்காது”: இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர்

“இலங்கை நிராகரிப்பால் ஐ.நா நடவடிக்கையில் எந்த தாக்கமும் இருக்காது”: இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் 0

🕔20.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரித்தமையானது, மனித உரிமைப் பேரவையின் பொறிமுறைச் செயற்பாட்டில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையர், இலங்கை தொடர்பில் கடந்த 13ஆம்

மேலும்...
‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை

‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை 0

🕔20.Sep 2021

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு உடன்படிக்கையினால், அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சமநிலையை ‘ஆக்கஸ்’ ஒப்பந்தம் குலைக்கும் என்று வடகொரியா வெளியுறவு அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த வாரம் இரண்டு வகையான ஏவுகணைகளை வடகொரியா சோதனை

மேலும்...
ஜனாதிபதி கோட்டா, ஐ.நா செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டா, ஐ.நா செயலாளர் சந்திப்பு 0

🕔20.Sep 2021

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, நாடுகளுக்கிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு ஐக்கிய

மேலும்...
இலங்கையின் உள்ளுர் பணிகளை, வெளி அமைப்புக்களால் கையகப்படுத்த முடியாது:  பொதுநலவாய செயலாளரிடம் பீரிஸ் தெரிவிப்பு

இலங்கையின் உள்ளுர் பணிகளை, வெளி அமைப்புக்களால் கையகப்படுத்த முடியாது: பொதுநலவாய செயலாளரிடம் பீரிஸ் தெரிவிப்பு 0

🕔19.Sep 2021

ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது ஐ.நா. சாசனத்தின் உயிரோட்டம் மற்றும் ஆவணங்களுக்கு ஏற்ப அது அமையவில்லை எனவும், பொதுநவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட் இடம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுநவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன்

மேலும்...
பால்மாவின் விலையை 01 கிலோவுக்கு 200 ரூபா அதிகரிக்க இணக்கம்

பால்மாவின் விலையை 01 கிலோவுக்கு 200 ரூபா அதிகரிக்க இணக்கம் 0

🕔19.Sep 2021

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம்  இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான  இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரித்துமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். இதனையடுத்து நிதியமைச்சருடன் சந்தையின்

மேலும்...
நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், பதவி விலக தீர்மானம்: அழுத்தம், மோசடிகளை காரணமாக கூறுகிறார்

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், பதவி விலக தீர்மானம்: அழுத்தம், மோசடிகளை காரணமாக கூறுகிறார் 0

🕔19.Sep 2021

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவுக்கு அடுத்த வாரம் வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அழுத்தம் பிரயோகித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு வெள்ளை பூண்டு கொள்கலன்கள்

மேலும்...
மதுக்கடைகளைத் திறப்பது பொருத்தமானதல்ல:  சுகாதார சேவைகள் பிரதி  பணிப்பாளர்

மதுக்கடைகளைத் திறப்பது பொருத்தமானதல்ல: சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் 0

🕔18.Sep 2021

கொவிட் நிலைமையின் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றமை பொருத்தமான விடயமல்ல என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான

மேலும்...
இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா; இனி என்ன நடக்கும்?: சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி

இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா; இனி என்ன நடக்கும்?: சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி 0

🕔18.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நிராகரித்ததன் மூலம், இலங்கையின் ராஜதந்திரம் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சர்வதேச சட்டத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம்

மேலும்...
பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்கத் தீர்மானம்

பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்கத் தீர்மானம் 0

🕔18.Sep 2021

பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களையயு வழங்கி பல்கலைகழகங்களை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்

மேலும்...
ஆப்கானில் அமெரிக்கா கொன்ற 10 பொதுமக்கள்: “சோகமான தவறு” என தெரிவிப்பு

ஆப்கானில் அமெரிக்கா கொன்ற 10 பொதுமக்கள்: “சோகமான தவறு” என தெரிவிப்பு 0

🕔18.Sep 2021

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. ஓகஸ்ட் 29ஆம் திகதி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரு மனிதாபிமான சேவை உதவியாளர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் இறந்தனர் என, அமெரிக்காவின் மத்திய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்