மு.கா.தலைவருக்கு கொரோனா, தொடர்பிலிருந்த 10 எம்.பிகளுக்கு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தல்

மு.கா.தலைவருக்கு கொரோனா, தொடர்பிலிருந்த 10 எம்.பிகளுக்கு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தல் 0

🕔10.Jan 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள முஸ்லிம்ட காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமுடன் தொடர்பிலிருந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இவர்கள் முதற்தர தொடர்பாளர்கள் என்றும் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தேவையான சுகாதார நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கமைய, குறித்த 10 உறுப்பினர்களுக்கும்

மேலும்...
எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம்

எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம் 0

🕔9.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ‘யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில்,

மேலும்...
62 பேரோடு காணாமல் போன இந்தோனேசிய விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம்

62 பேரோடு காணாமல் போன இந்தோனேசிய விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம் 0

🕔9.Jan 2021

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம், கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. கிளம்பிய நான்கே நிமிடங்களில் அந்த விமானத்தின் தொடர்பு இல்லாமல் போனது. ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம், இந்தோனேசியாவின் மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை

மேலும்...
சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் நடுவராக கல்முனையிலிருந்து ஜப்ரான் தெரிவு

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் நடுவராக கல்முனையிலிருந்து ஜப்ரான் தெரிவு 0

🕔9.Jan 2021

– எம்.என்.எம். அப்ராஸ் – சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் (ஃபிஃபா  – FIFA) நடுவராக கல்முனையை சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும். இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான பெயர் பட்டியலில் இலங்கையிலிருந்து ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் உட்பட 06 பேர் பிரதான

மேலும்...
ட்விட்டரில் இனி ட்ரம்ப் இல்லை: அதிரடியாக முடக்கப்பட்டார்

ட்விட்டரில் இனி ட்ரம்ப் இல்லை: அதிரடியாக முடக்கப்பட்டார் 0

🕔9.Jan 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து உள்ளதால்’ அவர் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக முடக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டிரம்பின் கணக்கிலிருந்து (@realDonaldTrump) பதிவிடப்பட்ட சமீபத்திய ‘ட்வீட்’கள் மற்றும் அதையொட்டி உள்ள சூழ்நிலைகளை தீவிர மதிப்பாய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறுகிறது. அமெரிக்க நாடளுமன்றத்தின் மீது டிரம்பின்

மேலும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது 0

🕔9.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி நேற்றிரவு இடித்து அகற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி நேற்ற வெள்ளிக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. பல்கலைக்கழக மானியங்கள்

மேலும்...
விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு

விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு 0

🕔8.Jan 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து,

மேலும்...
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா: மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா: மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 0

🕔8.Jan 2021

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் இருவர், கொவிட் தொற்றாளர்களாகக் கண்டறியப்பட்டமையைத் தொடர்ந்து அந்த ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மனியங்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசோதனை மேற்கொண்டபோது, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதியானதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரின் நேரடி தொடர்புகளாக

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர 0

🕔7.Jan 2021

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றத்திலேயே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபரை தடுத்து விசாரித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை காரணமின்றி ஒன்பது மாதங்களாக ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்? அவரை பிணையில் விடுதலை செய்யுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரின் சடலங்கள் எரிக்கப்படும்: சுகாதார அமைச்சர் உறுதி

கொரோனாவினால் மரணிப்போரின் சடலங்கள் எரிக்கப்படும்: சுகாதார அமைச்சர் உறுதி 0

🕔7.Jan 2021

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். கொவிட் தொற்று காரணமாக மரணிப்போரது சடலங்களை தகனம் செய்வதே உசிதமானது என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு

மேலும்...
119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல்

119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல் 0

🕔7.Jan 2021

பொலிஸ் அவசர தொலைபேசி சேவையான 119ஐ அழைத்து, பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 40 வயதான மேற்படி நபரைக் கைது செய்த பொலிஸார், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படும்: நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்றி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படும்: நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்றி 0

🕔7.Jan 2021

அனைவருக்கும் திருமண வயதை 18ஆக உயர்த்துவதன் மூலமாக, முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்றி நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். திருத்துவதற்கு கவனம் செலுத்தியுள்ள 37 சட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் அவர் கூறினார். சில தீவிரவாதிகள் தங்கள் சொந்த நலன்களை நிறைவேற்ற மதத்தையும் இனத்தையும் பயன்படுத்துகின்றனர்

மேலும்...
உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா

உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா 0

🕔7.Jan 2021

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதி முகாயைாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பிரதி முகாமையாளருடன் நெருங்கி செயற்பட்ட மேலும் 15 விமான நிலைய ஊழியர்கள் 15க்கும் அதிகமானோர் இதுவரையில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சிலர் –

மேலும்...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கலவரம்; ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடாவடி: நால்வர் பலி

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கலவரம்; ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடாவடி: நால்வர் பலி 0

🕔7.Jan 2021

அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கெப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் மிகப் பெரும் கலவரம் இடம்பெற்றது. ஜனாதிபதி டிரம்ப்யினுடைய ஆதரவாளர்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி

மேலும்...
உக்ரைன் விமானப் பணியாளர் மூலமே, நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவியது: டொக்டர் சுதத் சமரவீர

உக்ரைன் விமானப் பணியாளர் மூலமே, நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவியது: டொக்டர் சுதத் சமரவீர 0

🕔7.Jan 2021

நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை உக்ரைனிலிருந்து வந்த விமானப் பணியாளர் ஒருவரின் மூலமே பரவியது என பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தொற்றுநோயியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தொற்றுநோயியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கடந்த செப்டம்பரில் சீதுவை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்