மு.கா.தலைவருக்கு கொரோனா, தொடர்பிலிருந்த 10 எம்.பிகளுக்கு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தல்

🕔 January 10, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள முஸ்லிம்ட காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமுடன் தொடர்பிலிருந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இவர்கள் முதற்தர தொடர்பாளர்கள் என்றும் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தேவையான சுகாதார நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, குறித்த 10 உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்து அவர்களை தனிமையிலிருக்குமாறு அறிவித்தியுள்ளதாகவும் படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னுடன் 10 நாட்களுக்குள் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Comments