முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படும்: நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்றி

🕔 January 7, 2021

னைவருக்கும் திருமண வயதை 18ஆக உயர்த்துவதன் மூலமாக, முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்றி நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

திருத்துவதற்கு கவனம் செலுத்தியுள்ள 37 சட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் அவர் கூறினார்.

சில தீவிரவாதிகள் தங்கள் சொந்த நலன்களை நிறைவேற்ற மதத்தையும் இனத்தையும் பயன்படுத்துகின்றனர் என்று கூறிய அமைச்சர், முழு நாட்டிற்கும் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றும் என்றார்.

இதேவேளை புதிய நீதிமன்ற வளாகம் 16.5 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர்; ஜனவரி 25ஆம் திகதி அதற்கான அடிக்கல்லை பிரதமர் மஹிந்த நாட்டுவார் எனவும் கூறினார்.

சட்டத்துறையை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த நீதியமைச்சர், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் உட்பட குறைந்தது 37 சட்டங்களைத் திருத்துவதற்கும் அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு விரைவில் கூடும் எனவும் அலி சப்றி குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்