யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது

🕔 January 9, 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி நேற்றிரவு இடித்து அகற்றப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி நேற்ற வெள்ளிக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சி. சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரவு முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Comments