அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர்

அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர் 0

🕔26.May 2020

நாட்டில் இன்றைய தினம் (மாலை 06 மணிவரை) 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஒரே தினத்தில் அதிகளவான கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும். இதனால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை 712 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். உலகளவில் 55 லட்சத்து

மேலும்...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 0

🕔26.May 2020

அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.  29ஆம் திகதி மே மாதம் 1964ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 55 வயதாகிறது. கொழும்பிலுள்ள அவரின் வீட்டில் இருந்த போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் மரணமடைந்தார். இவர் முதற் தடவையாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா

மேலும்...
முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு 0

🕔26.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு. அவை – அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில் இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் 08 பேர் இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை 05 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர் தேசியப்பட்டில்

மேலும்...
கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு 0

🕔25.May 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்த அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குவைத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் – திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க, நாட்டில் கொரோனாவினால்

மேலும்...
கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு 0

🕔25.May 2020

கொரோனா நோயாளர்களைக் கண்டறியும் பொருட்டு, 54 ஆயிரத்து 834 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணி வரையில்) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க 1,141 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் 674 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். 458 பேர் சிகிச்சை

மேலும்...
நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் 0

🕔23.May 2020

நாட்டின் பல பகுதிகளிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை இன்று இரவு 8.00 மணி முதல் நாளையும், நாளை மறுதினம் திங்கட்கிழமையும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, நாளைய பெருநாள் தினத்தை தத்தம்

மேலும்...
செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு

செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு 0

🕔23.May 2020

நாட்டில் எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளன. மே 26ஆம் திகதி, செவ்வாய் தொடக்கம் நாட்டின்

மேலும்...
ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம்

ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம் 0

🕔23.May 2020

ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பேராசிரியர் எம்.டி. லமாவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினுடைய முன்னாள் உபவேந்தர் ஆவார். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள புதிய தூதுவர் இன்று சனிக்கிழமை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் புதிய தூதுவர் தமது கடமைகளை பொறுப்பேற்பதற்காக ரஷ்யா ​நோக்கி புறப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு

மேலும்...
பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி; இருவர் மட்டுமே உயிர் தப்பினர்

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி; இருவர் மட்டுமே உயிர் தப்பினர் 0

🕔23.May 2020

பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 92 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஐவரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் சிந்து மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மேற்படி

மேலும்...
பாகிஸ்தானில் விமானம் விபத்து; பயணித்த 107 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை

பாகிஸ்தானில் விமானம் விபத்து; பயணித்த 107 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை 0

🕔22.May 2020

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் விமானமொன்று இன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம், கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்துக்குள்ளான

மேலும்...
தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம்; நீதிமன்றில் கோரிக்கை: தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிப்பு

தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம்; நீதிமன்றில் கோரிக்கை: தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔22.May 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு, சட்டமா அதிபர் – வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேவமுனி டி சில்வா, இதனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். அம்மனுக்களில், எவ்வித

மேலும்...
நோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம்

நோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம் 0

🕔22.May 2020

ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு எட்டு மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம் 0

🕔21.May 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது – அரசாங்கம் அழுத்தம் செலுத்த முயலுகின்றது என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் மீது அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பழி தீர்க்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போருக்கு, அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும்: கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

கொரோனாவினால் மரணிப்போருக்கு, அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும்: கல்முனை மாநகர சபையில் தீர்மானம் 0

🕔21.May 2020

– பாறுக் ஷிஹான்– கொரோனாவினால் மரணமடைந்தவர்களுக்கு அவரவர் மத முறைப்படி  இறுதிக் கிரியைக் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி  கல்முனை மாநகர  சபையில் இன்று வியாழக்கிழமை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர். எம். அஸீம், இதற்கான பிரேரணையை முன்வைத்தார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு  

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு டொக்டர் பஸ்மினா மருந்துப் பொதிகள் அன்பளிப்பு

அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு டொக்டர் பஸ்மினா மருந்துப் பொதிகள் அன்பளிப்பு 0

🕔21.May 2020

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு, அங்கு கடமையாற்றும் டொக்டர் ஐ. பஸ்மினா அறூஸ் ஒரு தொகுதி உடல் தேற்றி மருந்துப் பொதிகளை தனது சொந்த நிதியில் பெற்று வழங்கினார். கொவிட்-19 வைரசினை கட்டுப்படுத்தும் பொருட்டு ஆயுர்வேத துறையினால் தயாரிக்கப்பட்ட உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்தினையே இவ்வாறு அவர் வழங்கி வைத்தார். அட்டாளைச்சேனை தள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்