பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி; இருவர் மட்டுமே உயிர் தப்பினர்

🕔 May 23, 2020
விபத்தில் உயிர் பிழைத்த முகம்மட் சுபையிர்

பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 92 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஐவரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் சிந்து மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி விமான விபத்தில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்னர்.

தொடர்பான செய்தி: பாகிஸ்தானில் விமானம் விபத்து; பயணித்த 107 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை

Comments