ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு

ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு 0

🕔26.Feb 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார். “ஐக்கிய தேசியக்கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் முதற் கட்டமாக தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும்...
முழங்காலில் இருந்த அதிபரிடமே, 500 மில்லியன் ரூபாய் கோருகிறார் ஊவா முதலமைச்சர்

முழங்காலில் இருந்த அதிபரிடமே, 500 மில்லியன் ரூபாய் கோருகிறார் ஊவா முதலமைச்சர் 0

🕔26.Feb 2018

ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, முழங்காலில் வைத்ததாகக் கூறப்படும் பெண் அதிபரிடம் 500 மில்லியன் ரூபாவினை மான நஷ்ட ஈடாக வழங்குமாறு கோரி, சட்டத்தரணி ஊடாக கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த பெண் அதிபர் பணியாற்றும் பாடசாலையில் மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்ளுமாறு கோரி, சம்பந்தப்பட்ட அதிபருக்கு  முதலமைச்சர் கடிதமொன்றினை அனுப்பி வைத்த போதிலும்,

மேலும்...
பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க

பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க 0

🕔26.Feb 2018

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர

167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர 0

🕔26.Feb 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி, 167 சபைகளை இயக்கும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ தமது கட்சியிடமே உள்ளது என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்தி​ரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான

மேலும்...
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔26.Feb 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04ஆவது முறையாக, இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவணம் தயாரித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராகும் பொருட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,

மேலும்...
அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர்

அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர் 0

🕔25.Feb 2018

– மப்றூக் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை, இலங்கையிலுள்ள முதற்தர  10 பணக்கார அரசியல்வாதிகளில்  ஒருவராகக் காட்டும் வகையிலான செய்தியொன்று, சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தச் செய்தியில் இலங்கை அரசியல்வாதிகளில் முதல் பணக்காரராக மஹிந்த ராஜபக்ஷவும், 10ஆவது பணக்காரராக பிரமர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதேவேளை, பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் சொத்து மதிப்புக்களும்,

மேலும்...
சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார்

சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார் 0

🕔25.Feb 2018

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளபோதும், இரண்டு வாரங்களுக்கு மட்டுமே, அவர் அந்தப் பதவியினை தன்வசம் வைத்திருப்பார் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்காக, சரத் பொன்சாகாவின் பெயரையே பிரதமர் ஆரம்பத்தில் சிபாரிசு செய்திருந்தார். ஆனாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை 0

🕔25.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தமது வீதியினை சேதப்படுத்தியுள்ளதாகவும், அதன் மூலம் சூழலை மாசடையச் செய்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தின்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு 0

🕔25.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதிலும் இன்று, அம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, மாவட்டத்தில் நெல் அறுவடை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அம்பாறை மாவட்டத்தில் வறட்சி

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள்

அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள் 0

🕔25.Feb 2018

– அஹமட் – அமைச்சரவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவிடம் இருந்தது. இதேவேளை, லக்ஷ்மன் கிரியல்ல – அரச தொழில் முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகவும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராக அமைச்சர்

மேலும்...
அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார் 0

🕔24.Feb 2018

சுசில் பிரேமஜயந்த – நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்கப் போவதில்லையென, அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே, இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில்

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை

அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை 0

🕔24.Feb 2018

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும், அவர் அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவார் எனவும் செய்திகள் உலவி வந்த நிலையிலேயே, அவருக்கு எந்தவித அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி

மேலும்...
இன்றைய அமைச்சர்கள், நாளை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகலாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமரவீர கருத்து

இன்றைய அமைச்சர்கள், நாளை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகலாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமரவீர கருத்து 0

🕔24.Feb 2018

இன்றைய அமைச்சர்கள், நாளை நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்கலாம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் நாளைய தினம் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்; “கடந்த காலத்தில் அமைச்சர்களின் செயற்பாடுகளை

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பாலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பாலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔24.Feb 2018

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர், இன்று சனிக்கிழடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் இருவரும் மார்ச் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இவர்கள் முதுகு வலியால்

மேலும்...
ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள்

ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள் 0

🕔23.Feb 2018

நாட்டிலிருந்து 54 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த 03 இந்தியர்கள் நேற்று வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இந்தியாவின் மதுரை நகருக்கு நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் விமானத்தில் இவர்கள் பயணிக்கவிருந்தனர். இவர்களிடமிருந்து 10 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் நிறை 916.25 கிராமாகும். இவர்கள் தமது பயணப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்