அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

🕔 February 24, 2018

சுசில் பிரேமஜயந்த – நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்கப் போவதில்லையென, அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே, இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் சுசில் பிரேமஜயந்த கலந்து கொள்ளாமல், வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தெரியவருகிறது.

எனினும் முன்கூட்டியே திட்டமிட்ட வெளிநாட்டு பயணம் காரணமாகவே, சுசில் பிரேமஜயந்த நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பில் கலந்து கொள்ள மாட்டார் என, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்