இன்றைய அமைச்சர்கள், நாளை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகலாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமரவீர கருத்து

🕔 February 24, 2018

ன்றைய அமைச்சர்கள், நாளை நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்கலாம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் நாளைய தினம் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“கடந்த காலத்தில் அமைச்சர்களின் செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். நெருக்கமானவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை கொடுப்பதை விடவும், இலக்குகளை கொண்டு பணியாற்ற கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறான நிலைப்பாடுதான் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவரும் வெற்றி பெறவில்லை. பிரதேச சபைகளை கோரி, முன்னாள் ஜனாதிபதியை தோற்கடித்து சில கிராமத்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்