167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர

🕔 February 26, 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி, 167 சபைகளை இயக்கும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ தமது கட்சியிடமே உள்ளது என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்தி​ரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலில், எந்த சபையில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், 1 67 சபைகளை இயக்கும் சக்தி தங்களிடமே இருப்பதாகவும் அவர் இதன்போது விபரித்தார்.

Comments