Back to homepage

மேல் மாகாணம்

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வன்தட்டை ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு, சன்மானம் வழங்க தீர்மானம்

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வன்தட்டை ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு, சன்மானம் வழங்க தீர்மானம் 0

🕔12.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய   வன்தட்டினை (External Hard drive) பொலிஸாரிடம் ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு சன்மானம் வழங்க இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய ஓட்டோ சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சாரதிக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த

மேலும்...
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு 0

🕔11.Jan 2020

முன்னைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி 08 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை முறையீடு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை முறையீடு 0

🕔10.Jan 2020

கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்துள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை செய்வதாக, புதிய மாணவிகளின் பெற்றோர் பல்கலைக்கழக நிர்வாகததுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். புதிய மாணவர் கறுப்பு நிற ஹபாயா மற்றும் கருப்பு நிற சப்பாத்து அணிந்து வருவதோடு, கறுப்புத்தில்தான் பையினையும் கொண்டுவர வேண்டும் என்று, சிரேஷ்ட மாணவிகள் அச்சுறுத்தியுள்ளனர். இந்த கட்டளையை மீறும்

மேலும்...
பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல

பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔9.Jan 2020

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின்

மேலும்...
ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிக்கிறது: பொன்சேகாவின் உரை குறித்து, முன்னாள் அமைச்சர் றிசாட் கருத்து

ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிக்கிறது: பொன்சேகாவின் உரை குறித்து, முன்னாள் அமைச்சர் றிசாட் கருத்து 0

🕔9.Jan 2020

நாட்டின் புலனாய்வுப் பிரிவு தலைமை அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமை தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியமை கவலை தடுவதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். சஹ்ரான் என்ற ஒரு கயவன் செய்த கொடிய செயலுக்காக, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் பிணையில் விடுதலை 0

🕔5.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. 05 லட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணையில் நாடளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்ட நிலையில், வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது 0

🕔4.Jan 2020

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில்

மேலும்...
பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு 0

🕔4.Jan 2020

மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தகம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான

மேலும்...
முதல் முஸ்லிம் பெண் அதிகாரி காலமானார்

முதல் முஸ்லிம் பெண் அதிகாரி காலமானார் 0

🕔4.Jan 2020

– அஸ்ரப் ஏ சமத் – இலங்கை பொலிஸ் சேவையில் பணியாற்றிய மலாய சமூகத்தைச் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண் அதிகாரி  திருமதி பக்கீா்  நேற்று  முன்தினம் வியாழக்கிழமைதெகிவளையில் காலமானார்.    இவரது ஜனாசா தெகிவளை – களுபோவில முஸ்லிம் மையவாடியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.  காலம்சென்றவர் இல்லத்தில் இருந்து, பொலிஸ் அணி வகுப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட

மேலும்...
ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல்

ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல் 0

🕔2.Jan 2020

சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 2018 – செப்டம்பர் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்படுவதற்கு முதல்நாள், ரூபவாஹினியில் மூன்று விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்த விளம்பரங்களை ஒளிபரப்புமாறு கூறியுள்ள சஜித் பிரேமதாஸ,

மேலும்...
பதவிக்காக கட்சியை பிளவுபடுத்தப் போவதில்லை: சஜித் பிரேமதாஸ

பதவிக்காக கட்சியை பிளவுபடுத்தப் போவதில்லை: சஜித் பிரேமதாஸ 0

🕔1.Jan 2020

பதவி, பொறுப்பு, அந்தஸ்துக்காக போராடி கட்சியை பிளவுப்படுத்தப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பதவிகளை விட மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார். ரத்மலானையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “பெரும்பாலும் மார்ச்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம்

முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம் 0

🕔1.Jan 2020

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று புதன்கிழமை லங்கா தனியார் வைத்தியசாலையின் சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித்த சேனாரத்ன நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். ராஜித்த சேனாரத்ன லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர

மேலும்...
ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔30.Dec 2019

தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் போன்ற அனைத்து தனிநபர் விபரத் தகவல்களையும் – ஒரு தரவு மையத்தின் கீழ் இணைக்கப்பட்டதாகச் சேகரித்து பதிவு செய்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மேலும்...
பாலியல் கல்வியில் 50 வீதமான இளைஞர்களுக்கு முறையான அறிவில்லை

பாலியல் கல்வியில் 50 வீதமான இளைஞர்களுக்கு முறையான அறிவில்லை 0

🕔30.Dec 2019

நாட்டில் 50 வீதமான இளைஞர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் இனப் பெருக்க சுகாதார கல்வி ஆகியவற்றில் முறையான அறிவு இல்லை என, தேசிய ரீதியிலான இளைஞர் கணக்கெடுப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி கௌசல்யா ஆரியரத்ன கூறியுள்ளார். பாலியல் ரீதியான அறிவு மட்டுமன்றி குறித்த இளைஞர்கள் தமது உடல் பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை எனவும்

மேலும்...
சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔30.Dec 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை சட்ட ரீதியான நடவடிக்கை என்று பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடந்த 27ஆம் திகதி அழைப்பு விடுத்த போது, இதனை வாய்மொழி மூலமாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக, பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்