முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம்

🕔 January 1, 2020

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று புதன்கிழமை லங்கா தனியார் வைத்தியசாலையின் சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித்த சேனாரத்ன நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ராஜித்த சேனாரத்ன லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

அதற்கமைய முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று பகல் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: முன்னாள் அமைச்சர் ராஜிதவை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் செயற்பாடு இடைநிறுத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்