Back to homepage

பிரதான செய்திகள்

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி 0

🕔23.Mar 2019

வடக்குக்கு மாகாண சபைத் தேர்தலை நடைத்தப்படாததற்கு எந்த எதிர்ப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் வெளிப்படுத்தவில்லை என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று சனிக்கிழமை சபையில் சகேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று கைத்தொழில் , வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை

மேலும்...
ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

🕔22.Mar 2019

– மப்றூக் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்துக்கு விஜயம் செய்திருந்த போது, கறுப்புக் கொடி காட்டி – கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் இருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதனை புத்தளம்

மேலும்...
வைத்திய அத்தியட்சகரைத் தாக்குவதற்கு முயற்சித்த வைத்தியர்: கண்டனம் தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

வைத்திய அத்தியட்சகரைத் தாக்குவதற்கு முயற்சித்த வைத்தியர்: கண்டனம் தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் 0

🕔22.Mar 2019

– கலீபா – பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவருக்கு எதிராக அந்த வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியரின் நடவடிக்கைகள் வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் நோயாளிகளுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.இது விடயமாக வைத்தியசாலை நிர்வாகம் – அவ்வைத்தியரிடம் பலமுறை

மேலும்...
நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, வில்பத்து புரளிக்கு முடிவு கட்டுங்கள்: சபையில் றிசாட் கோரிக்கை

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, வில்பத்து புரளிக்கு முடிவு கட்டுங்கள்: சபையில் றிசாட் கோரிக்கை 0

🕔22.Mar 2019

“வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயார்” என்று, அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ”இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி நியமித்துள்ள சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய, சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவு

மேலும்...
பிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம்

பிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம் 0

🕔22.Mar 2019

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ‘பிச்சைக் காசு’ எனத் தெரிவித்துள்ள – வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; “குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க

மேலும்...
வில்பத்து ‘பூகம்பத்தை’ கிளப்பி, அறுவைக்காடு விடயத்தில் எம்மை அடக்கி விடப் பார்கின்றனர்: அமைச்சர் றிசாட்

வில்பத்து ‘பூகம்பத்தை’ கிளப்பி, அறுவைக்காடு விடயத்தில் எம்மை அடக்கி விடப் பார்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔21.Mar 2019

– சுஐப் எம். காசிம் –அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு, போராட்டத்தை திசை திருப்பும் வகையில் சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.கலைவாதி கலீலின் பவள விழாவும் ‘என் வில்பத்து

மேலும்...
நியூஸிலாந்து தாக்குதலைக் கண்டித்து, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; தீர்மானமும் நிறைவேற்றம்

நியூஸிலாந்து தாக்குதலைக் கண்டித்து, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; தீர்மானமும் நிறைவேற்றம் 0

🕔21.Mar 2019

– எம்.எஸ்.எம். நூர்தீன் – நியூஸிலாந்து பள்ளிவாசலில் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதுடன், நகர சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து சபை அமர்விலும் கலந்து கொண்டனர். நியூஸிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிசவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
யாழ் மேயர் மற்றும் மனைவிக்கு கொலை மிரட்டல்

யாழ் மேயர் மற்றும் மனைவிக்கு கொலை மிரட்டல் 0

🕔21.Mar 2019

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும், அவரின் மனைவிக்கும் கடிதம் மற்றும் வைபர் மூலமாக  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அவை குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாநகல சபை முதல்வர் இ. ஆனொல்ட்டின்  பெயருக்கு கடந்த  15 ஆம் திகதி  அனுப்பப்பட்ட கடிதம் மூலம் கொலை அச்சுறுத்தல் விடப்பட்டதோடு, அக்காலத்தில் 

மேலும்...
பாணந்துறையில் முஸ்லிம் – சிங்களவர் மோதல்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

பாணந்துறையில் முஸ்லிம் – சிங்களவர் மோதல்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔21.Mar 2019

பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வாகன விபத்தொன்றினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம்

மேலும்...
உதுமாலெப்பையுடன் சேர்ந்து, கட்சிக்குள் இருந்த பதறுகள் வெளியேறியுள்ளன: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

உதுமாலெப்பையுடன் சேர்ந்து, கட்சிக்குள் இருந்த பதறுகள் வெளியேறியுள்ளன: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா 0

🕔21.Mar 2019

– றிசாத் ஏ காதர் – “உதுமாலெப்பையின் வெளியியேற்றத்தால், கட்சிக்குள் இருந்த பதறுகளும் சேர்ந்து வெளியேறியுள்ளன. அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் மற்றும், பிரதித் தலைவர் பதவிகளை வகித்த, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை,

மேலும்...
அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல்

அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல் 0

🕔20.Mar 2019

– தம்பி – அட்டாளைச்சேனை பிரதேச சபையினால், அஷ்ரப் நகரில் குப்பை கொட்டும் இடமொன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்திலுள்ள அநேகமான உள்ளுராட்சி சபைப் பிரிவுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இந்த இடத்திலேயே கொட்டப்படுகிறது. இதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அங்கு குப்பைகளைக் கொட்டும் ஏனைய உள்ளுராட்சி சபைகள், கொடுப்பனவை

மேலும்...
கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார்

கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார் 0

🕔20.Mar 2019

– பாறுக் ஷிஹான் –கல்முனை ‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்களின் நீருக்கான கட்டணத்தினைச் செலுத்துவதற்குரிய பணத் தொகையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கியுள்ளார்.‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்கள், தமது குடிநீருக்கான கட்டணங்களைச் செலுத்தாமையினால், அவர்களுக்கான நீர் வழங்கள் தடைப்பட்டிருந்தது.இந்த நிலையில் ‘கிறீன் பீல்ட்’ தற்காலிக முகாமைத்துவ குழுவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக, தேசிய

மேலும்...
‘சிவனொளி பாதமலை’ பெயர் பலகைக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை

‘சிவனொளி பாதமலை’ பெயர் பலகைக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை 0

🕔20.Mar 2019

– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் இன்று புதன்கிழமை, தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன.  இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ்

மேலும்...
அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு

அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔20.Mar 2019

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என்று, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார். இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திலுள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த பணிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில், அமெரிக்கர் ஒருவரின் விண்ணப்பம்

மேலும்...
1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது

1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது 0

🕔20.Mar 2019

நாட்டில் பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய 1,200 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள்களை அழிக்கும் நடவடிக்கை, எதிரவரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளரும் விசேட வைத்திய அதிகாரியுமான சமந்த கித்தலவல ஆராய்ச்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்