Back to homepage

பிரதான செய்திகள்

01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு

01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Jul 2019

நாட்டில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை,

மேலும்...
ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணி உதயம்

ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணி உதயம் 0

🕔11.Jul 2019

– க. கிஷாந்தன் – மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியொன்றினை உருவாக்கியுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ. கதிர் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளன.

மேலும்...
பதவி உயர்வு பெற்றுச் செல்லும் படைப் பிரிவு தளபதிக்கு, அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கௌரவமளிப்பு

பதவி உயர்வு பெற்றுச் செல்லும் படைப் பிரிவு தளபதிக்கு, அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கௌரவமளிப்பு 0

🕔11.Jul 2019

– எம்.வை. அமீர் – 24 ஆவது படைப் பிரிவின் அம்பாறை மாவட்ட தளபதி மகிந்த முதலிகே பதவி உயர்வு பெற்று செல்வதையிட்டு, அவரை அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கௌரவித்தது. அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையிலான குழுவினர், மஹிந்த முதலிகேயினை சந்தித்து தமது கௌவரத்தினை வழங்கினர்.

மேலும்...
றமீஸ் அபூபக்கர் பீடாதிபதியாகத் தெரிவு: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நிகழ்வு

றமீஸ் அபூபக்கர் பீடாதிபதியாகத் தெரிவு: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நிகழ்வு 0

🕔11.Jul 2019

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட பீடாதிபதியாக, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒருவர், அந்தப் பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக தெரிவாகியுள்ளமை இதுவே முதன் முறையாகும். அந்த வகையில் றமீஸ் அபூபக்கர் – பீடாதிபதியாக தெரிவாகியமை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு வரலாற்று

மேலும்...
வீதியை மறித்துக் கொட்டப்பட்டுள்ள கல், மண்: பொதுமக்களை கடுப்பாக்கும் கம்பரலிய

வீதியை மறித்துக் கொட்டப்பட்டுள்ள கல், மண்: பொதுமக்களை கடுப்பாக்கும் கம்பரலிய 0

🕔10.Jul 2019

– பாறுக் ஷிஹான் – நற்பிட்டிமுனை மதிரிஸா வீதியில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் வீதிகளை மறித்து கல் மற்றும் மண் கொட்டப்பட்டுள்ளமையினால், பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வீதியால் பயணிக்க வேண்டியவர்கள் மாற்று பாதை ஏதும் இன்றி, போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவ்விடயம் குறித்து பொலிஸ் அவசர பிரிவுக்கு பொதுமக்களில்

மேலும்...
தடம் புரளும் தர்மத் தேர்

தடம் புரளும் தர்மத் தேர் 0

🕔10.Jul 2019

– சுஐப் எம் காசிம் – இலங்கைச் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தேசப்பற்றிலிருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படும் சாட்சியங்கள் நாளாந்தம் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. போருக்குப் பிறகு கிடைத்த நிம்மதியும் அமைதியும் தேரவாத மேலாண்மையின் வளர்ச்சிப்படிக்கு உதவியுள்ளதையே 2010 லிருந்து அவதானிக்கப்பட்டு வரும் உண்மைகள். சிங்கள மொழிக்கும் ஆரியப் பரம்பலுக்கும் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் போர்

மேலும்...
முஸ்லிம்களுக்கு காணிகளை விற்கக் கூடாதென விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளமை, இனவாதத்தின் உச்சம்: மு.கா. பிரமுகர் ஆரிப் சம்சுதீன்

முஸ்லிம்களுக்கு காணிகளை விற்கக் கூடாதென விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளமை, இனவாதத்தின் உச்சம்: மு.கா. பிரமுகர் ஆரிப் சம்சுதீன் 0

🕔9.Jul 2019

உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற படித்த பண்பாளரான கௌரவமான ஒருவர், கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று, கிழக்கு மாகாண சபை  முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

மேலும்...
விஷப் பாம்பு

விஷப் பாம்பு 0

🕔9.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்கள அரசை அமைப்போம் சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம் நாடாளுமன்றத்தில் சிங்களவர் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம் சிங்களவரின் நாடாளுமன்றமே தற்போதைய தேவையாகும் சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை இது சிங்களவர்களின் நாடு கண்டியில் பொதுபலசேனா அமைப்பினர் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில், அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர்

மேலும்...
ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்ற ஹிஸ்புல்லா, ஆசிப் கைது

ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்ற ஹிஸ்புல்லா, ஆசிப் கைது 0

🕔9.Jul 2019

ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்றார் எனச் சந்தேகிக்கப்படும் எஸ்.எச். ஹிஸ்புல்லா எனும் நபர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் ஹம்பாந்தோட்ட பகுதியில் ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்றார் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை, ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாகச் சந்தேகிக்கப்படும், எம்.எம். ஆசிப் எனும் 29

மேலும்...
5ஜி கம்பங்களுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை

5ஜி கம்பங்களுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔9.Jul 2019

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். இனறு செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் மாநகரசபையினால் ஐந்து சந்திப்பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறு கோரியே, இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. “யாழ்ப்பாணம் மாநகரசபையினர் மின்கம்பங்களை பொருத்துவதாக பொய்யுரைத்து கதிா்வீச்சு கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுகின்றனர்.

மேலும்...
ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு

ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு 0

🕔9.Jul 2019

ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை என்று, ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியை அவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசிய போதே, றிசாட் பதியுதீன் இதனைக் கூறினார். இதன்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள், நெருக்கடிகள்

மேலும்...
ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை

ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை 0

🕔9.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவரையும் தலா 05 லட்ச ரூபா சரீரரப் பிணையில் விடுதலை செய்யுமாறு,  கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி இருவரையும் குற்றப்

மேலும்...
பொதுபலசேனாவின் பிரகடனம், முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது: முன்னாள் அமைச்சர் ஹசனலி

பொதுபலசேனாவின் பிரகடனம், முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது: முன்னாள் அமைச்சர் ஹசனலி 0

🕔9.Jul 2019

பொதுபல சேனா அமைப்பினர் கண்டியில் நேற்று முன்தினம் நடத்திய மாநாட்டில் வெளிப்படுத்திய தீர்மானங்களில் சில, முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்தமைக்குச் சமமானதாகும் என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த ஞானசார தேரர் ஜனாதிபதியின் விஷேட அனுமதியுடன் விடுதலை

மேலும்...
ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் 0

🕔8.Jul 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம்களை பாதுகாக்க முடியாத ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்  என முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.  ‘அண்மையில் உள்ள அரச பாடசாலை – சிறந்த பாடசாலை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை ஆசிரியர் விடுதி

மேலும்...
ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும், ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும், ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன 0

🕔8.Jul 2019

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமைக்கும் ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். “இதைப் பற்றி யாரும் கதைக்க முன் வருவதில்லை. கதைப்பதற்கு பயப்படுகின்றனர். ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கிய போது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்