வீதியை மறித்துக் கொட்டப்பட்டுள்ள கல், மண்: பொதுமக்களை கடுப்பாக்கும் கம்பரலிய
– பாறுக் ஷிஹான் –
நற்பிட்டிமுனை மதிரிஸா வீதியில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் வீதிகளை மறித்து கல் மற்றும் மண் கொட்டப்பட்டுள்ளமையினால், பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வீதியால் பயணிக்க வேண்டியவர்கள் மாற்று பாதை ஏதும் இன்றி, போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இவ்விடயம் குறித்து பொலிஸ் அவசர பிரிவுக்கு பொதுமக்களில் அறிவித்த நிலையில், நேற்று இரவு குறித்த இடத்துக்கு பொலிஸார் வருகை தந்த பொலிஸார், கிராம சேவகரை அழைத்து கற்களை கொட்டியவர் தொடர்பான விபரங்களை பெற்றதுடன் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர்.
ஆயினும் இதுவரை நிலைமை அப்படியே காணப்படுகின்றது.
கற்களை கொட்டியதாக கூறப்படடும் ஒப்பந்தகாரர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரியவருகிறது.