ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும், ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன

🕔 July 8, 2019

ம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமைக்கும் ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

“இதைப் பற்றி யாரும் கதைக்க முன் வருவதில்லை. கதைப்பதற்கு பயப்படுகின்றனர்.

ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கிய போது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவுக்கு  வழங்க வேண்டாம் என எச்சரித்தது.  

ஹம்பாந்தோட்டை அரசியல் ரீதியில், பூ​கோள ரீதியில் முக்கியமான இடமாகும். ஹம்பாந்தோட்டையில்   சீனா கால் பதித்ததால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இங்கு கால் பதிக்க பார்க்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்