இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக 20 பேர் கொலை: தேரரிடம் விசாரணை ஆரம்பம்

🕔 July 8, 2019

ஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக காத்தான்குடியில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று, மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தேரர் இந்தக் கருத்தைத்தெரிவித்திருந்தார்.

வட்டிக்குப் பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்குத் தகவல் வழங்கியமை, விபச்சாரத்தில் ஈடுபட்டமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியமை உள்ளிட்டவற்றினை புரிந்தவர்களே, இவ்வாறு இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட்டனர் என்று அவர் கூறியிருந்தார்.

தொடர்பான செய்தி: இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்