Back to homepage

Tag "விஜேதாச ராஜபக்ஷ"

சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜேதாச செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு நிராகரிப்பு

சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜேதாச செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு நிராகரிப்பு 0

🕔16.May 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது. இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், சட்டத்தரணி கீர்த்தி உடவத்தவை பதில்

மேலும்...
விஜேதாச ராஜபக்ஷவுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என  நீதிமன்றம் உத்தரவு

விஜேதாச ராஜபக்ஷவுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு 0

🕔13.May 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளர் விஜேதாச ராஜபக்ஷ, கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ராஜிநாமா செய்தமையினை அடுத்து, கட்சியின் புதிய தலைவராக விஜதாச ராஜபக்ஷவை சுதந்திரக் கட்சியின் செயற்குழு

மேலும்...
சுதந்திர கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்திரி ராஜிநாமா; விஜேதாச நியமனம்

சுதந்திர கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்திரி ராஜிநாமா; விஜேதாச நியமனம் 0

🕔12.May 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜினாமா செய்துள்ளார். அதனையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இன்று (12) கோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச களமிறங்குவார்: மைத்திரி தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச களமிறங்குவார்: மைத்திரி தெரிவிப்பு 0

🕔1.May 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ களமிறங்குவார் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மறைந்த ரி.பி. இலங்கரத்ன நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். விஜேயதாச ராஜபக்ஷவுக்கு கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்ட மைத்திரிபால சிறிசேன்;

மேலும்...
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி 0

🕔22.Apr 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யாப்பின் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்றுள்ள – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், ஸ்ரீலங்கா

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ 0

🕔16.Apr 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தனக்கு பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் – இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த

மேலும்...
உடலுறவு தொடர்பான சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

உடலுறவு தொடர்பான சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔23.Mar 2024

பதினாலு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது  விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் – அதற்கான தண்டனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர்

மேலும்...
உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல்

உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல் 0

🕔22.Feb 2024

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணி ஆகியவற்றுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை அரசு அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்த தீர்மானமானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட மேற்படி சொகுசு வீட்டை நீதி

மேலும்...
சிறு குற்றங்களுக்கு சிறையில்லை; வீட்டுக் காவல்: நீதியமைச்சர் தெரிவிப்பு

சிறு குற்றங்களுக்கு சிறையில்லை; வீட்டுக் காவல்: நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔9.Dec 2023

வறுமை அல்லது வேறு காரணங்களினால் சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார். சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி,

மேலும்...
தனது நாடாளுமன்ற உரையை  நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு

தனது நாடாளுமன்ற உரையை நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔6.Dec 2023

நேர்மையான நீதியரசர்களால்தான் நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று முன்தினம் (04) நாடாமன்றில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் இன்று (06) நாடாளுமன்றில் தொடர்ந்து அவர் பேசுகையில்; “நீதியமைச்சு தொடர்பான விவாத தினத்தன்று

மேலும்...
புற்று நோயாக மாறியிருக்கும் நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்

புற்று நோயாக மாறியிருக்கும் நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம் 0

🕔5.Dec 2023

நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சில நுண்நிதி நிறுவனங்கள் நாட்டுக்கு புற்று நோயாக மாறியுள்ளதாகவும், மத்திய வங்கியின் ஊடாக அன்றி – தனியான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக, அந்த நிறுவனங்களை கண்காணிக்கத்

மேலும்...
போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ 0

🕔12.Sep 2023

இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக, இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். போட்டித்தன்மை கொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில், நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை 0

🕔14.Jul 2023

நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைக்கவும், நீதி முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இலங்கையில் ‘மனு பேரம்பேசும் சட்டத்தை’ (Plea Bargaining law) அறிமுகப்படுத்த – நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (13) தெரிவித்தார். இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் 11,27000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்,

மேலும்...
பொம்மை, பொம்மலாட்டக்காரன், புடலங்காய்: ஆட்சியாளர்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஷ சொன்ன உதாரணங்கள்

பொம்மை, பொம்மலாட்டக்காரன், புடலங்காய்: ஆட்சியாளர்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஷ சொன்ன உதாரணங்கள் 0

🕔13.Mar 2022

பசில் ராஜபக்ஷவுக்கோ அரசாங்கத்திற்கோ தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே மக்கள் புதிய சக்தியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். “வாக்களித்த 69 லட்சம்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’  வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ 0

🕔24.Dec 2020

ஈஸ்டர் தின தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்குமாறு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ என்ற அமைப்பு வழங்கிய 05 மில்லியன் டொலர்களுக்கும் (இலங்கை பெறுமதியில் சுமார் 09 கோடி 50 லட்சம் ரூபா) என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் கேட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்