ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவரையும் தலா 05 லட்ச ரூபா சரீரரப் பிணையில் விடுதலை செய்யுமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது