
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்வதற்கான பிடியாணையை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் பிறப்பித்தது.
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களைப் பெற்று, அதன் முன்னேற்றம் குறித்து டிசம்பர் 09ஆம் திகதி, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.


