
எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு – ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் சுமார் 350 பில்லியன் டொலர் குறைவடைந்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பங்குச் சந்தை அறிமுகத்திற்குப் பிறகு, அதன் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான சரிவையடுத்து, எலான் மஸ்க்-இன் சொத்து மதிப்பில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் 30% க்கும் மேல் சரிந்ததால், மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு சுமார் 1.45 டிரில்லியன் டொலரிலிருந்து சுமார் 1.1 டிரில்லியன் டொலராகக் குறைந்துள்ளதாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸின்மதிப்பை முதலீட்டாளர்கள் மறுமதிப்பீடு செய்ததாலும், பத்திர வெளியீட்டின் மூலம் பில்லியன் கணக்கான டொலர்களைத் திரட்ட, நிறுவனம் திட்டங்களை அறிவித்ததாலும், இந்தச் சரிவு ஏற்பட்டது. மூன்று வர்த்தக நாட்களில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் சுமார் 27% சரிந்து, அதன் சந்தை மதிப்பில் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை இழந்தன.
இந்த மிகப்பெரிய சரிவு இருந்தபோதிலும், மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரராகவும், உலகின் ஒரே ட்ரில்லியனராகவும் நீடிக்கிறார். அவரின் செல்வத்தின் பெரும்பகுதி – இன்னும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லாவில் உள்ள பங்குகளில்தான் அடங்கியுள்ளது.
இது உறுதி செய்யப்பட்டால், இந்த சமீபத்திய சரிவானது, 2022-ல் மஸ்க் 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிகரச் சொத்தை இழந்த முதல் நபர் என்ற சாதனையை முறியடித்துவிடும்


