
இலங்கை 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் மூலம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது.
இலங்கை சுங்கத்துறையால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதிக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களுடன் சேர்த்து, 2026 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதிகளிலிருந்து கிடைத்த மொத்த வருவாய் சுமார் 7,393.39 மில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7.56% அதிகரிப்பைக் காட்டுகிறது.

இதே காலகட்டத்தில், பொருட்கள் ஏற்றுமதி வருவாய் 5,758.44 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து, ஆண்டுக்கு ஆண்டு 7.63 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
சேவை ஏற்றுமதித் துறையும் 1,634.95 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.31% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும், முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், பொருட்கள் ஏற்றுமதி 18.25% வளர்ச்சியும், சேவை ஏற்றுமதி 18.67% வளர்ச்சியும் அடைந்துள்ளன.


