தலைப்புச் செய்திகள்

உப அஞ்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முதியோர் உதவு தொகைப் பணம் திருட்டு

மொரகஹஹேன உப அஞ்சல் அலுவலகத்திலுள்ள துகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு, ரூ. 474,000 திருடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக அந்தப் பணம் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (19) இரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை அலுவலகத்திற்கு வந்த உப தபாலதிபர், கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டவுடன், உடனடியாக பொலிஸாருக்கு முறையிட்டிருக்கிறார்.

நகரப் பஸ் நிலையத்திற்கு அருகில், ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் இந்த உப அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளதாகவும், சந்தேக நபர் உள்ளே நுழைந்து பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து பணத்தைத் திருடியதாக நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.