தலைப்புச் செய்திகள்

ஈரான் போரிலும் ஒப்பந்தத்திலும் வென்று விட்டதாக, 92 வீதமான இஸ்ரேலியர்கள் தெரிவிப்பு

படம்: AI மூலம் கற்பனையாக உருவாக்கப்பட்டது

போரினாலும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினாலும், ஈரான் மேலும் வலுப்பெற்றுள்ளதாக, இஸ்ரேலியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 17 முதல் 20 வரை, ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகம், அகாம் நிறுவனத்துடன் இணைந்து 3,644 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது.

இதன் மூலம், அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தை அடுத்து, பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் எனும் அவர்களின் மனநிலை வெளிப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில், 92.1 சதவீதம் பேர், இந்த மோதலில் ஈரான் வென்றதாகவோ அல்லது அதிக ஆதாயம் அடைந்ததாகவோ கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், 82.9 சதவீதம் பேர் இஸ்ரேலின் நீண்டகாலப் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதாக உணர்ந்தனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தேர்தல் தளமான, வலதுசாரி அணியை ஆதரிக்கும் வாக்காளர்களிடையே கூட, 93.1 சதவீதம் பேர் – ஈரான் வென்றதாக நம்புகின்றனர் என, இந்தக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்திற்கு பரவலானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பதிலளித்தவர்களில் 63.2 சதவீதம் பேர் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்த நிலையில், வெறும் 12.1 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.