தலைப்புச் செய்திகள்

ஈரானின் தாக்குதலை, அபுதாபியில் வைத்து படம் பிடித்த இலங்கை குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் – அபுதாபியில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளின் கூட்டாளிகள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்கள் இலங்கைக்கு மீட்டு வரப்பட்டுள்ளனர்.

மோதர நிபுண் என்பவரின் சகோதரரான மோதர சத்துர மற்றும் ப்ளுமென்டல் சங்க உட்பட ஆகியோரே இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து, பின்னர் நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்கள், நேற்று 13ஆம் திகதி இரவு நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர்கள் இருவரும், அபுதாபியில் வசித்து வந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு மோதலின் போது ஈரானியத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் படங்கள் மற்றும் வீடியோகளை தங்களது கைபேசிகளில் வைத்திருந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்புப் படையினர் அவர்கள் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டனர்.