தலைப்புச் செய்திகள்

உலக குருதி கொடையாளர் தினத்தில், அட்டாளைச்சேனையில் இரத்த தான முகாம்

– றிசாத் ஏ காதர் –

உலக குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி அட்டளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது.

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் கணிசமானோர் பங்கேற்றனர்.

பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஐ. முகம்மட் வாஜித் தலைமையில் இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை – இரத்த வங்கிப் பிரிவின் வேண்டுகோளுக்கு அமைவாக இவ் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் ஒவ்வொருவருடமும் ஜூன் 14ஆந் திகதி – உலக குருதிக் கொடையாளர்கள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.