தலைப்புச் செய்திகள்

சுரேஷ் சாலேயின் தலைவிதியை நீதித்துறைதான் தீர்மானிக்கும்; யாரும் இடையூறு செய்யக்கூடாது: அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேயின் தலைவிதியை நீதித்துறைதான் தீர்மானிக்கும் என – கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ இன்று (08) தெரிவித்தார்.

சுரேஷ் சாலே துன்புறுத்தப்படுகிறார் எனக் கூறி, அதற்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடைய தலைவிதியை நீதித்துறைதான் தீர்மானிக்க வேண்டும்” என்று, ஊடக சந்திப்பொன்றில் அவர் கூறினார்.

விசாரணைகளுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சாலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து, விசாரிக்கப்பட்டு வருகிறார்.