தலைப்புச் செய்திகள்

பிள்ளையான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு

யங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கில் வாய்மொழி வாதங்கள் மீதான விசாரணை இன்று (02) நிறைவடைந்தன.

வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வேறொரு திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான், 2025 ஏப்ரல் 08ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டார்.