
பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவரை தான் சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒத்துக் கொண்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேயே இதனை அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் – மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று(20) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விளக்கங்களைக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் – பிள்ளையானை சந்தித்தமையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
பிள்ளையான் சிறையில் இருந்தபோது அவரைச் சந்தித்தது இரகசியமல்ல என்றும் நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் பிள்ளையhனைத் தான் சந்தித்ததை சிறைப் பதிவேடுகள் உறுதிப்படுத்தும் என்று நமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நேரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கூட்டணியில் அங்கம் வகித்ததாகவும், 2015 ஜனாதிபதித் தேர்தலிலும், 2018 உள்ளூராட்சித் தேர்தலிலும் அவர்களுடன் போட்டியிட்டதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
“2018/19-ஆம் ஆண்டுகளில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சிறையில் இருந்தபோது, அவரை நான் சந்தித்தது இரகசியமல்ல. உண்மையில், நான் அவரைச் சந்தித்ததற்கான சிறைப் பதிவேடுகள் தெளிவாகக் கிடைக்கின்றன,” என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


