தலைப்புச் செய்திகள்

மோட்டார் குண்டுகள் கஞ்சிகுடியாறு பகுதியில் மீட்பு

– பாறுக் ஷிஹான் –

துருப்பிடித்த நிலையில் 05 மோட்டார் குண்டுகள் கஞ்சிகுடியாறு குளத்துக்கு அருகில் இன்று (20) மீட்கப்பட்டுள்ளன.

கடந்த யுத்த காலத்தில் பாவிப்பதற்காக இந்தக் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேக ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாக இருந்தது. அங்கிருந்து ராணுவ முகாம்களை நோக்கி மோட்டார் செல் குண்டுகளை எல்ரிரியினர் ஏவுவார்கள்.

மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படை பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.