
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (20) தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பெட்டியின் விலை 50 ரூபாயினால் உயர்ந்துள்ளது.

ஒரு கிலோகிராம் பெட்டியின் விலை 125 ரூபாயினால் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
400 கிராம் பால் மா பெட்டியின் விலை 1150 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை 1200 ரூபாயாகும்.


