தலைப்புச் செய்திகள்

காரைதீவில் வாடகைக்கு வீடெடுத்து போதைப்பொருள் கடத்தியவர்கள் கைது

– பாறுக் ஷிஹான் –

ஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை நீண்டகாலமாகக் கடத்தி வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் அmமைந்துள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் நேற்று (09) இரவு இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது, குறித்த இரண்டு சந்தேக நபர்களையும், அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கர தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

கைதான சந்தேக நபர்களில் ‘கடற்குதிரை’ என அழைக்கப்படுபவரிடமிருந்து இருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றுமொரு சந்தேக நபரிடம் இருந்து 20 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டன.

குறித்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களிடமிருந்து – ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் ரூபா பணம், இலத்திரனியல் தராசு, நவீன கைத்தொலைபேசிகள் என்பன சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் 40 மற்றும் 31 வயது மதிக்கத்தக்கவர்களாவர். இவர்களில் ஒருவர் சிகை அலங்காரத் தொழில் செய்பவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்சந்தேதக நபர்கள் புத்தளம், மன்னார் மாவட்டங்களில் இருந்து தரை மற்றும் கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் காரைதீவு பகுதியில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றினை பெற்று, இக்கடத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் – சான்றுப் பொருட்களுடன் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுளனர்.